உன் இதயமாக
நீ என் விழியாக இருந்திருந்தால் உன்னை இமையாக காத்திருப்பேன்,
ஆனால் நீயோ என் இமைகளுக்கு நடுவில் நின்று கொண்டு உன் நினைவுகளால், என் தூக்கத்தை அல்லவா பறிக்கிறாய்...
நிஜத்தில் தான் உன்னை காண முடியாத பாவியாய் இருக்கிறேன்,
கனவில் கூட உன்னை காண விடாமல் ஏன் இப்படி என்னை தண்டிக்கிறாய்...?
உன்னை காதலித்ததை தவிர வேற என்ன தவறு செய்தேன் நான் ..?
விட்டுகொடு...
விட்டுவிடு...
என்னை வாழ விடு...
இல்லையென்றால் சாவதற்காவது விடு...
கடவுள் கூட தூணிலும் துரும்பிலும் தான் இருப்பான்,
ஆனால் நீயோ என் மூச்சாகவே இருக்கிறாயே...
நீ பிரிந்த நேரமே நான் இறந்திருக்க வேண்டும் ஆனால்,
அதற்கும் வழி இல்லாமல் பாதியை இருக்கிறாயே...?
ஏன்..?
நான் துடித்து கொண்டு இருப்பதை பார்க்க உனக்கு அவ்வளவு மகிழ்ச்சியா...?
அப்படிருந்தால் சொல்லிவிடு,
உனக்காக என்றும் துடிக்க நான் தயார்..
உன் இதயமாக....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
