செல்ல வளர்ப்பு
சின்ன ஸ்பூன்,சின்ன கைத்துண்டு,சின்ன பாட்டில்,
இப்படி சின்ன சின்ன பொருட்கள்
ஆசையாய் வாங்கினேன் -வீட்டிற்கு
முதல் செல்லம் வந்துவிட்டதே.
பரபரப்பாக கணினியை தட்டி-வலைத்தளத்தில் தேடினேன்,
நண்பர்களிடத்தில் கேட்டும் தெரிந்துகொண்டேன்-
எப்படி வளர்ப்பது என்று .
மகிழ்ச்சியாய் இருந்தது
பயமாய் இருந்தது
நண்பன் சொன்ன ஒரு விஷயம்
கவனமாய் வளர்க்கவேண்டும் -மனதில் எண்ணிக்கொண்டேன்
.சின்ன பாட்டிலில் பாலை ஊற்றி கொடுதேன்
சப்பி சப்பி குடிக்கும் அழகை ரசித்தேன்
மாமா வந்தார்,பால் மட்டும்தானா
திடமான பழங்கள் கொடு
பல் திடமாக வேண்டாமா?என்றார்.
இப்படி வளர்ந்து வளர்ந்து
செல்லம் வீட்டில் ஓடித்திரிந்தது
ஏனோ நண்பன் சொன்னது உறுத்தலாய் இருந்தது
ஆய்யோசெல்லத்துக்கு பழம் வாங்கி வைகவிலையே
படபடதேன் -கார் சாவியை எடுத்தேன்
அப்போதும் கதவோரம் செல்லம் நின்று பார்த்துக்கொண்டுதான் இருந்தது
உடைகளை மாற்றி கொண்டு
அவசரமாய் போகையில்
காலில் ஏதோ பட்டு சென்றது
பழம் வாங்கிவிட்டு திரும்பி வந்தேன்
கண்களால் நம்ப முடியவில்லை,
அழுதேன் கதறினேன்
நண்பன் சொன்னது பலித்துவிட்டது
என் காலில் பட்டு நசுங்கீருந்தது
என் செல்ல அணில் குஞ்சு
நான்கு நாட்கள் பசி தூக்கம் இல்லை
ஐந்தாம் நாள் சமாளித்து கொண்டு எழுந்தேன்
கணினி பக்கம் ஓடினேன்
வளர்காதீர் அணில் குஞ்சை
அதன் அதீத வேகம் ,
அதை கொன்று விடும்
நண்பன் சொன்னது நினைவில்வர
அழுதேன் ,ப்லொக்கில் எழுதினேன்.