காதலும்... கடவுளும்....

மனிதனை படைத்த
கடவுள்.........
பூமியை
படைத்தான்
வெறுமையாய் இருந்தது
வானத்தை
படைத்தான்
இருளும் ஓளியும் சூழ்ந்தது
நீரினை
படைத்தான்
உயிரினம் பிறந்தது
காற்றினை
படைத்தான்
சுவாசம் பிறந்தது
காதலை
கொடுத்தான் அதில்
அனைத்தும் இருந்தது
காதல் கடவுளின் தொடக்கம்....
மனிதனின் முற்று பெறாத முடிவுகள்...!