உருவம் இல்லா உயிர் கொண்ட காற்றாக தொடருவேன்

என்னவனே...

நான் கொண்ட முதல் உயிர்
காதலும் நீயே...

என் இறுதி காதலும் நீயே ...

என் காதல் என்றுமே
உன் கண்ணுக்கு தெரியாத
பூக்காற்றகவே உன்னை தொடரும்....

நீ சுவாசிக்கும் காற்றாகவே
என்றும் உன்னுடன் வாழ்வேன் ...

உருவம் இல்லா உயிர் கொண்ட
காற்றாக என்றும் உன்னை தொடரும்
என் காதல் பயணம்....

உன் பார்வைகள் பல்வேறு
திசைகளில் பயணித்தாலும்
என் வாழ்க்கை பயணம்
உன்னையே தொடரும் ...

காதலில் ஆழமான காயங்களை
தந்து சென்றவனே -நீ
மறந்துவிடலாம் ....
உன்னால் என்னுள் ஏற்பட்ட
காயங்களையும் ,உன் காதலையும் ....

என்றும் என் காதல் வாழக்கரணம்
நீ உன் நினைவாய்
என்னுள் உண்டாகிய
வலிகளே...ஆறாத காயமாய்...

உன் பார்வைகள்
என்னை அசாதாரணமாக
தீண்டும் நிமிடம்
வலிகளால் என் இதயம்
துடிப்பதை நீயே அறிவாய்....

பார்வையால் போதுமென -நான்
சொல்லும் முன்னே நிறுத்திவிடுவாயா
பிரிந்தும் நீ தந்து கொண்டிருக்கும் வலிகளை ....

மௌனமாகவும் ,பார்வையாலும்
என்னை சிதைப்பது உனக்கு
பிடிக்குமோ ...என்னை காயப்படுத்தி
ரசிக்கும் என் காதலனே...

சொல்லி செல்லடா ....வலிகளை
தாங்கிக்கொள்ள என்றுமே
உன் காதலியாக
காத்துக்கொண்டிருக்கிறேன்
உன்னவளாய் ....

எழுதியவர் : சங்கீதா.k (13-May-13, 3:32 pm)
பார்வை : 248

மேலே