அடுத்த நொடி..!

அடுத்த நொடி......!
கிழிசலுக்குள் விரல் விட்டுப்
பார்க்கும்
காலம்.....!

கந்தலாய் மனது.....

கானகம் தோறும்
காற்றுவழிக் கடத்தலாய்
மகரந்தச் சேர்க்கைக்
கொண்டமரும் காமம்
கூட கழன்று கொண்டது...

இந்த நொடிக்குள்
முற்றுமாய் அடங்கிப்போன
பிரபஞ்சம்
இந்த நொடிக்கு மட்டுமே...!

அடுத்த நொடிக்காய்
ஒரு பிரபஞ்சம்
உருவாகிக் கொண்டிருக்கிறது...

பெரும்பாலான அலைவரிசையில்
ஒரே செய்தி மட்டுமே
கடத்தப் பட்டாலும்
அடுத்த நொடிக்கு
முந்தைய நொடியின்
இருப்பு அடுத்த நொடியின்
முன்பதிவாய் இருப்பதே
இல்லை.....!

அடுத்த நொடிகள்
பிழை
அற்றதாய் இருக்க
மனம் விரும்பினாலும்
பிழையுடனே
அடுத்த நொடிகள்
பிறந்தாலும்
இந்நொடியின் நீட்சியாய்
இருப்பதில்லை.....

பிழைகளின் நிகழ் தகவு
முடிவிலி....!

எழுதியவர் : ஹரீஷ்.நெ (13-May-13, 7:59 pm)
சேர்த்தது : Hareeshmaran
பார்வை : 175

மேலே