சிந்தனை - பகுதி 2
சில கேள்விகளும் பதில்களும்
உயிர்,
பிறப்பு எடுக்கும்போது
உலக சங்கதிகளை,
உயிர்க் காற்று, ஒளி, ஒலி,
தொடுதல், பசி
ஆகியனவற்றை
உள்வாங்குவது
உணர்வு என்றாகிறது.
உள் வாங்கியதை,
உணர்ந்ததை,
வெளிப்படுத்தினால்
அது உணர்ச்சி என்றாகிறது.
அந்த உணர்வுகளில்
பேதம் கண்டு புரிதல் வந்தால்
அது வளர்ச்சி என்றாகிறது.
பேதம் காண்பதில்
இயலாத்தனம் வந்தால்
அது
உணர்ச்சியற்ற தனம்
என்றாகிறது.
கொண்ட உணர்வுகளின்
வெளிப்பாடுகளில்
கட்டுப்படுத்தும் திறன் கொண்டால்
அறிவு என்றாகிறது
கட்டுப்படுத்தா திறன் கொண்டால்
அது உணர்ச்சி என்றாகிறது
மனிதக் குழந்தை
வளர்கிறது என்றாலே
உடல் வளர்ச்சியோடு
மூளை வளர்ச்சியும்தான்
கணக்கில் கொள்ளப்படுகிறது
உணர்ச்சி மிகுதியை
வளர்ச்சி என்று
கொள்வதேயில்லையே
அழுகை வந்தால்
அடக்க வேண்டும்
கவலை, பொறாமை வந்தால்
அவற்றை தொலைக்க வேண்டும்
கண்ணீர் வந்தால் அதை
துடைக்க வேண்டும்
கோபம் வந்தால் அதை
ஒழிக்க வேண்டும்
வெறுப்பு வந்தால் அதை
அடக்க வேண்டும்.
மகிழ்ச்சி வந்தால் அதை
கட்டுக்குள் வைக்க வேண்டும்
இப்படி
ஏன்
எல்லாம் உணர்ச்சிகளையும்
அடக்கி வைத்திருக்க வேண்டும்?
கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்?
அறிவை மட்டுமே ஏன்
வளர்த்து கொண்டே
இருக்க வேண்டும்?
பகுத்தறிவு என்றால் என்ன?
பகுத்தறிவு ஏன்
உயர்ந்ததாக கருதப்படுகிறது?
தொடரும்...