வலிக்கிறது

என் இதயத்தில் இடம் பிடித்த நீ
சில வேளைகளில் என்னை
சிரிக்க வைத்தாய்
பல வேளைகளில் என்னை
அழ வைத்தாய்
ஆனால் அந்த வலி எனக்கு
அப்போது தெரியவில்லை.
இன்றோ, வலிக்கிறது என்று
சொல்லக் கூட வழியில்லை
இருந்தும் - நானும் வாழ்கிறேன்
வெறும் நடைப் பிணமாய்
எல்லோரிடமும் தோற்று,
எல்லாவற்றிலும் தோற்று,
என் ஆசைகளை நிராசையாக்கி
என்னில் நானே செத்துக் கொண்டு