லிமரிக்-II-கே.எஸ்.கலை

வருவதில்லை வானத்து மழை
தருவதில்லை அரசாங்கம் விலை
இல்லாமல் உழைப்பு
கண்ணெல்லாம் களைப்பு
நாமறியோம் செய்துவிட்டப் பிழை !

பிரிவினைக்குப் பிறப்பிடமாய் மதம்
ஆறறிவை மட்டும் தாக்கும் விடம்
பார் செழிக்க
போர் ஒழிக்க
மதமெல்லாம் செய்திடுவோம் வதம் !

வருமுன் கொடுக்க வேண்டும் உறுதி
வந்தவுடன் பழக வேண்டும் மறதி
அவதியிலே மக்கள்
அரசியலில் மாக்கள்
காண்பதெப்போ இழிநிலைக்கு இறுதி ?

மனிதனாக வாங்கி வந்தேன் வரம்
மனிதர்களில் இல்லை இங்கு தரம்
பாதி இங்கு ஏழைகள்
மீதமுள்ளோர் கோழைகள்
கோர்த்துச்செல்ல இல்லைநல்ல கரம் !

கவிதையென்றுச் சொல்லும் போதினிலே
உணர்வெழுந்துத் துள்ளும் நெஞ்சினிலே
குப்பையாய்க் கிடக்குது
சுத்தமாக்கத் தடுக்குது
கலையழிந்துப் போய்விடுமோ பாரினிலே ?

லிமரிக் எழுதுவதற்கான பயிற்சி
கலை எடுத்துக் கொண்ட முயற்சி
இருக்கலாம் குறை
செய்யலாம் நிறை
கூட்டுமுயற்சி தந்திடுமே தேர்ச்சி ?

எழுதியவர் : கே.எஸ்.கலை (15-May-13, 8:22 pm)
பார்வை : 363

மேலே