தலை குனிகிறாள் தமிழன்னை!

தொல்காப்பியத் தமிழ் படித்தும்,
தொலைபேசி அழைப்பென்றால்
'ஹலோ' சொல்லித் தொடங்கும்போது
தலை குனிகிறாள் நம் தமிழன்னை!

தேவைக்குதவும் தமிழனிடம்
'தேங்க்யூ' என்று பிதற்றும்போது
தேகம் கூச நாணுகிறாள்
தேன்மதுரத் தமிழன்னை!

சாலைதனில் நடக்கையிலே
சக தமிழன் இடித்துவிட்டால்
சாவி கொடுத்த பொம்மைபோல்
'சாரி' என்று முழங்கும்போது
சங்கடத்தில் நெளிகின்றாள்
தங்கத் தமிழ் அன்னையவள்!

ஆங்கிலம் கலந்து பேசுதலை
ஆடம்பரம் எனும்போதும்,
நல்ல தமிழ் பேசுவோரை
நாட்டுப்புறம் எனும்போதும்
தம் நாதியற்ற நிலையெண்ணி
நாணுகிறாள் நம் தமிழன்னை!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (16-May-13, 3:46 pm)
சேர்த்தது : பார்த்திபன்
பார்வை : 171

மேலே