எனது குறிப்பேட்டின் பக்கங்கள்...[9]
உன் நினைவின்றி
நான்
வேறேதும்
அறியேன் பெண்ணே !
ஒரு நொடியேனும்
நான்
உன் நினைவில்
வருவேனா பெண்ணே !!
[18]
***********
என் மனதில்
உனக்கு மட்டும்தானே
இடம் இருக்கின்றது
உன் மனதில்
ஒரு துளியேனும்
எனக்கு
இடம் இருக்கின்றதா ?
[19]
************
என்னைத் தவிர
எல்லாவற்றையும்
நேசிக்கும் பெண்ணே
உனக்குத் தெரியுமா
நான்
உன்னைத் தவிர
வேறு எதனையும்
நேசிப்பதில்லை என்று!!
[20]
***********
இந்த வகையிலேனும்
என்மேல் ஒரு தாக்கம்
இருக்கின்றதே
என்பதற்காக
நான்
சமாதானம்
அடைகின்றேன்
என்னை
பார்க்கும் போதெல்லாம்
பார்வையில்
வெறுப்பு நெருப்பையாவது
வீசிச் செல்கின்றாயே
என்பதற்காகவும்
அப்படியேனும் என்னை
பார்த்துச் செல்கின்றாயே
என்பதற்காகவும் !!
[21]
**********
[பக்கம் .10...... தொடரும்]
இனிய அறிவிப்பு
************************
கோயில் கும்பாபிசேக அழைப்பிதழ்
*********************************************
அருள்மிகு விநாயகர், அருள்மிகு மாகாளியம்மன், அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்கள்.
இடம் ; திருப்பூர் அருகே நாச்சிபளையம் கிராமம்
நாள் ; 20.05.2013 வைகாசி 6ம் நாள் திங்கட்கிழமை
நேரம்; காலை 6.15 மணி முதல் 7.15 மணிவரை
அனைவரும் வருக!!
இறையருள் பெறுக!!