மரங்களை விழுதென தாங்கி நிற்ப்போம்!!!

விலை மதிப்பற்ற
கிடைக்க அரிய
தலைசிறந்த அனுபவ
புத்தகங்கள் கிழிக்கப்பட்ட
நிலையில் முதியோர் இல்லங்களில்!!!
****************************************************************************
உயிரியல்பூங்கா சரி
இது என்ன பூங்கா?
மனிதர்கள் கூண்டுக்குள்
அடைபட்டிருக்க,ஈன்றெடுத்த
மிருகங்கள் பார்வையாளர்களாய்!!!
****************************************************************************
ஈன்றெடுத்தவர்களை அற்ப
காரணங்கள் கூறி
தள்ளிவைக்கும் பிள்ளைகள்!!!

தன்னை பெற்றவர்களுக்கும்,
தான் பெற்றப்பிள்ளைகளுக்கும்
ஒரே சமயத்தில்
துரோகிப்பவர் ஆவர்!!!
****************************************************************************
இன்று நீ
விதைத்ததை நாளை
நீயே அறுவடையும் செய்வாய்!!!
****************************************************************************
கடவுளின் வரங்களை
கண்ணென காப்பவனை,
அக்கடவுளே எச்சமயமும்
அக்கறையோடு காத்தருள்வார்!!!
****************************************************************************
மரங்களை தாங்கும்
விழுதுபோல் ஈன்றவர்களை
பேணி காப்போம்!!!
பெரியவர்களை கொண்டாடுவோம்!!!

அன்புடன் நவீன் மென்மையானவன்

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (17-May-13, 5:01 pm)
பார்வை : 121

மேலே