ஊதாரி உலகம்

கொடி குளிரினூடே இதமாக
கொடிய கரம் பற்றி
குதர்க்கமான எண்ணத்துடன்
கூடி குலாவும்
வஞ்சனை மிக்க நாடுடா தம்பி.....

தன்னையே கடவுள் என்பான்
தானே அகிலம் என்பான்
தன்னை மிஞ்சி எதுவும் இல்லை
தரணியே தன் தாகத்தின் எல்லை
என்று பிதற்றித் திரியும் உலகமடா தம்பி....

துரோகம் செய்பவன் எல்லாம்
இன்று முளைத்த துரோகி இல்லையடா
அந்த போர்வையில் உன் நண்பன் தான்
தரம்கண்டு தெரிந்து கொள்ளடா
பாம்புக்கு பால் வார்க்கும் பார்டா தம்பி....

சுகத்துக்கு தோள் கொடுப்பான்
சுரண்டுவதில் பேரின்பம் காண்பான்
கிட்டாததை எட்டிப் பிடிக்கும்
கிராதகன் நானே என்பான்
நட்பென்ற போர்வையில்
நச்சபிஷேகம் செய்யும் நல்லபாம்புடா தம்பி.....

காக்கை பிடித்தே உன்னை
கழுகினில் ஏற்றிவிடுவார்
பெருமைக்காக பெண்களை
மதித்தும் நடப்பார்
ஆண்களை அசிங்கப்படுத்தியும்
ஆறுதல் அடைவர்
கயவர்களும் கைகோர்த்து வாழும்
கண்ணிய பூமியடா தம்பி ....

உலகினில் பல ஓட்டையடா -இது
ஊறு செய்யும் பட்சிகளின் கோட்டையடா
பாதுகாத்துக் கொள் உன் பாதங்களை
கூட்டிச் சென்று குழப்பிவிடுவர்
உன் பாரம்பரிய கொள்கைகளை
நயமாக நசுக்கிவிடும் ஞாலமடா தம்பி .......

விதியென்று விம்மாதே
வேதனையில் புலம்பாதே
மதிகொண்டு வெல்லலாம் உலகை
விழித்துக்கொள் விட்டில் ஆகாதே
தட்டி பறிக்கும் தாயகம் இதுடா தம்பி ........

எழுதியவர் : bhanukl (17-May-13, 7:12 pm)
பார்வை : 247

மேலே