வீட்டுக்கு ஒரு மரம் ....,
வீட்டுக்கு ஒரு மரம் .வளர்க்க
வீடு ஒன்று கேட்காதீர் !
வீதியெல்லாம் உன் வீடு
வளரட்டும் ஒரு மரம் உன்னால்!!
மரம் வளர்க்க வீடொன்று கேட்டது - நம்
முயலாமையின் முதல் விளம்பரமா ? இல்லை
இயலாமைக்கு கொடுத்த முதல் பரிசா ?
தனிமரம் தோப்பாகுமா என்று எண்ணாதே!
ஒன்றின் கூட்டு இரண்டு
ஒன்றாய் இணைந்தால் நன்று!
வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க
வீடொன்று கேட்காதீர் !!

