மனிதனை தெரிந்து கொள்

மனிதனை தெரிந்து கொள்
மனதை புரிந்து கொள்
மமதையை மறந்து நீ
மனிதனாக நடந்து கொள்
உறவுகளை புரிந்து கொள்
உரிமையை எடுத்து கொள்
உதவியை செய்து கொள்
பிறர் அறியாது முடித்து கொள்
தாழ்ந்த உறவை அணைத்து கொள்
மேன்மை உனக்கு நிமிர்ந்து நில்
தேவை உறவு தெரிந்து கொள்
தேவைப்படும் ஒரு நாள் புரிந்து செல்
நடிக்கும் உறவுகளை அறிந்து கொள்
நம்பாதே இதில் நீ உறுதி கொள்
இறைவனை நீ தொழுது கொள்
மறுமைக்கு நன்மை சேர்த்து கொள்
உறுதியான ஈமானை மனதில் கொள்
இறைவனை மறக்காது நினைவில் கொள் !!
ஸ்ரீவை.காதர்.