பூனைகள் ஜாக்கிரதை

எல்லா பூனைகளும்
திருட்டு
பூனைகள்தான்
வீட்டிலும் சரி
தெருவிலும் சரி
வீட்டில் பால்
திருடும் பூனைகள்
ஜாஸ்தி ...
தெருவில் எலி தேடும்
பூனைகள்
ஜாஸ்தி ...
மனிதர்களிலும் நிறைய
பூனைகள் உண்டு
மத பூனைகள் ...
சாதி பூனைகள் ...
ஊழல் பூனைகள் ...
இப்படி இன்னும்
பல பல பூனைகள்
மக்களை எலிகளாக பாவித்து
அனு தினமும் கடித்து
காரி துப்புகிறது
கண்டபடி....
என்ன செய்ய ?
எலிகளை விட பூனைகள்
பலமாய் இருக்கிறது
அதேத் சமயம்
அழகாய் இருக்கிறது ...