தாமரைத் தடாகம் - 4

எழுத்து தளத்தில் எழுதப்பட்டு சரியான அங்கீகாரம் கிட்டாத படைப்புக்கள் இவை. தாமரைத் தடாகம் பெண் குழந்தைகளின் எழுத்துகளை உங்கள் முன் சமர்பிக்கிறது என்பது அறிந்ததே ! நான்காம் பாகத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி ! வாழ்த்தி வளருங்கள் !
--------------------
ஒவ்வொருவனும் உத்தமன் தான் – சசிதா
மிக மிக அழகான படைப்பு. ஒரு படைப்பாளிக்கே உரிய சீரிய சிந்தனை காண்கிறேன் இந்த படைப்பில். அதிகம் விவரம் தேவை இல்லாமல் கச்சிதமாய் சொல்லி முடித்து இருக்கிறாள் இக்குழந்தை. நெகிழத் தக்க படைப்பு.
கவிதை எண் - 108630
சேர்த்தது : sasitha
==============
அறிவுசார் நூற்றாண்டிலும் - நாகினி
மிக அருமையான பாடு பொருள். பெண்ணியம் குறித்து தெளிவாக சொல்லும் படைப்பு. சம அந்தஸ்து தர வேண்டிய பெண்டிரை போற்றவும் தூற்றவும் தேவை இல்லையே ? நியாயமான கேள்வியைக் கேட்கிறார் நாகினி.
காலத்தின் தேவை உணர்த்தும் படைப்பு.
சேர்த்தது : Nagini Karuppasamy
கவிதை எண் - 119737.
==============
பிடிச்சிருந்தா சொல்லு மச்சான் – சங்கர் சசி
கிராமிய நடையில் படைப்புக்கள் எழுதுவோர் இங்கு வெகு சிலரே...கிராமிய பாசையில் எழுதும் படைப்பில் ஒரு தனி கவர்ச்சி இருப்பது பலரும் அறிவர். அப்படி கிராமிய பாணியில் எழுதி இருக்கிறார் இந்த படைப்பை. இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாமே என்ற எண்ணம் தருகிறது படைப்பு.
படைப்பு அழகானது.
கவிதை எண் - 117624
சேர்த்தது : sankarsasi
==============
அப்பாவுக்காக – யோகராணி
வித்தியாசமாக எழுதி இருக்கிறார் படைப்பை. ஒரு குழந்தை எப்படி பெற்றோரைப் புரிந்து வைத்திருக்கிறது. தன தாய் தந்தையரின் மன சங்கடங்களை களைய தனது நிலையில் இருந்து எப்படி உதவுகிறது என்பதை அழகாக அருமையாக சொல்லி இருக்கிறார். ஒரு சில மாற்றங்கள் தேவை படைப்பில். மிக நல்ல பார்வையும் படைப்பும்.
கவிதை எண் - 121738
சேர்த்தது : yogaranir
==============
ஊமைப்பெண் நானடி – ஹர்ஷவர்தினி
ஊனம் என்பது ஒருத்தியின் உள்ளக் குமுறல்களை எப்படியெல்லாம் கிளறி விடுகின்றது என்பதற்கு மேற்கோள் காட்டக் கூடிய ஒரு படைப்பு. சரியான உவமைகளுடன் ஓர் ஊமைப்பெண் பேசுகிறாள் எம்முடன் வரிகளால். சிறப்பாக உணர்வுகளை வெளிக் கொணர்ந்திருக்கும் படைப்பு. கல்லூரியில் பரிசு பெற்ற கவிதை என்று கூறி இருக்கிறாள் இக் குழந்தை. இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும் சொற்களைத் தெரிவு செய்ய. நல்ல படைப்பு.
கவிதை எண் - 121761
சேர்த்தது : ஹர்ஷவர்தினி
---------------------
இனம் காணப்படாத நல்ல படைப்பாளிகளின் முகவரியாக இருப்பதே கலாமன்றத்தின் நோக்கம் !