இறக்கை இல்லாத காற்றாலை மின்சாரம் - Bladeless Wind Turbines
காற்றாலை மின்சாரம் ஒரு மாற்றூ மின்சாரமாக இருந்தாலும் அதில் உள்ள பிரச்சினை காற்றூ நன்றாக அடித்தால் தான் அதில் மின்சாரம் தயாரிக்க முடியும் என்ற எழுதப்படாத விதி இருப்பதால் ஒரு வருடத்தில் 4 மாதம் மட்டுமே இது இயங்குகிறது இந்தியா போன்ற நாடுகளில். ஏன் என்றால் அதி வேக காற்றூ இல்லாத நேரத்தில் இந்த கனமான பெரிய இறக்கைகள் அசையாது அதற்க்கு தேவை நல்ல வேகமான அழுத்தமான காற்றூ. இந்தியாவில் அது பருவ நேரங்களில் மற்றூமே கிடைக்கும். அமெரிக்காவின் ஷியர்வின்ட் என்னும் கம்பெனி புதிய காற்றாலை மின்சார வடிவங்களை அமைத்துள்ளனர். இதில் முதல் இறக்கைகள் கிடையாது. இரண்டாவது வெறூம் 1-4 கிலோமீட்டர் காற்றான மெல்லிய தென்றலே இதற்க்கு போதுமானது.
மேலே படத்தில் இருக்கும் மேல் தட்டி மெல்லிய காற்றை இழுத்து கீழ் நோக்கி கூம்பு போன்ற ஒரு ஃபனலில் செலுத்தும் போது மிக சிறிய அள்விலான காற்று கூட ஜெட் வேகத்தில் கீழ் நோக்கி வந்து கீழே இருக்கும் வின்ட் டர்பைன் ஜெனரேட்டரை இயங்க செய்யும் தினமும். இதற்க்கு வெறும் 37,000 ரூபாய் தான் 1000 வாட்ஸ் மின்சார தயாரிக்கும் டவருக்கான ஒரு முறை செலவாகும். இது விரைவில் வந்தால் ஒவ்வொரு விவாசயிக்கும், கிராமபுர மின்சாரத்திர்க்கும் கவலையே இருக்காது.