............மடையன்.............

நீ மடையனென்று விளித்ததன் அர்த்தம்,
மதி குறைந்தவனென்பதா?
அடடா !
தவறிழைத்தேன் புரிதலில் !
நான் நினைத்தேன் !
காதலை மடைதிறந்த வெள்ளமாய்க்கொட்டி,
உனைத்திக்குமுக்காடச்செய்பவன் என,
புகழாரம் சூட்டுகிறாய் என்று !
அடியே விடு !
இருந்துவிட்டுப்போகிறேன் இந்த மடையனாய் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (19-May-13, 7:09 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 57

மேலே