துளிநீரும் உதவுது
கொடிய கோடையிலே ஆடையே நனையுது
கொடுமை பாரீரோ நீரில்லா நிலை இங்கே !
அருந்திட நீரும் ஆக்கிட சோறும் இல்லை
வருந்திடும் நாமும் வாடித்தான் போகிறோம் !
நம்பிக்கை குறைகிறது நதிநீர் பங்கீட்டில்
தும்பிக்கை உள்ளதால் துளிநீரும் உதவுது !
தாகத்தை தணித்திட பாகனும் உதவிடலை
தண்ணீர் குழாயே கண்ணீரைத் துடைக்குது !
வானும் பொய்த்தது வஞ்சம் தீர்க்குது
வாழும் உயிர்கள் யாவும் துடிக்குது !
இந்நிலை நீடித்தால் நம்நிலை எந்நிலை
வானிலை அறிக்கையும் வறண்டு போனது !
பழனி குமார்