இரக்கமில்லாத உன் மனதில்
இரக்கமில்லாத உன் மனதில்
என்னை பற்றி
என்ன நினைத்து
வைத்திருக்கிறாய்?
பொன், பொருள்,பதவி, பெட்டகம்
எல்லாம் உனக்கு
இலவச பொருள் எல்லாம்
எனக்கா?
என்னை என்ன உழைக்க
தெம்பில்லாத சோம்பேறி
என்றா நினைத்தாய்...
என்னை உழைக்க விடாமல்
சோம்பேறியாக்கினால்
உன்னிடம் கையேந்தி கையேந்தி....?
வெள்ளையனிடம் கையேந்தி
நின்ற காலம் பொய்
இன்று என் நாட்டில் என் மண்ணில்
கையேந்தும் அவலம்?.....
என்ன சொல்ல?
பள்ளி சீருடை, புடவை, வேஷ்டி
மதிய உணவு,
மிக்சி கிரைண்டர், மின்விசிறி
பசுமை வீடு,
திருமணம்,
பிரசவ செலவு,மருத்துவ செலவு
சாவு செலவு
என்று எல்லாமே அரசியல்வாதியே
நீயே கொடுத்து விட்டால்
நான் பிறந்ததற்கு என்ன அர்த்தம்?