சமத்துவ புறம்
மாலை பொழுது
பேருந்து பயணம்
இதமான காற்று அல்ல
மூச்சு விட சிரமம் கொள்ளும் கூட்டம்!
கல்லூரி பெண்களும் , காளையர்களும் !
பள்ளி குழந்தைகளும் ,பாமரரும் ,
ஒன்று சேரும் சமத்துவ புறமாய்
இளைஞனின் இனிய சொர்க்கமாய்
பாமரனின் தோழனாய் என் பேருந்து !