நான் நானாகவே இருந்திருப்பேன்

நான் நானாகவே இருந்திருப்பேன்
அவளிடம் நான் முதன் முறையாக பேசும் போது, அவள் என்னிடம் பேசாமல் இருந்திருந்தால்,
அவள் என்னை ஓரக்கண்ணால் பார்க்காமல் இருந்திருந்தால்,
அவளை நான் பார்க்கும் போதெல்லாம் அவள் என்னை பார்த்து புன்னகைகள் புரியாமலேயே இருந்திருந்தால்,
அவள் தோழிகள் என்னை பார்த்து கேலியாக சிரிக்காமல் இருந்திருந்தால்,
அவளை நான் பார்க்காமலேயே இருந்திருந்தால்,
அவளை நான் காதலிக்காமல் இருந்திருந்தால்,
நான் நானாகவே இருந்திருப்பேன்: