கொலைகாரன் !
சத்தமில்லா ஒரு கொலைத்
திட்டம்
சின்னத் சின்னத் துண்டுகளாக
வெட்டினேன் !
நெருப்பில் நெஞ்சு ஆறும் வரை
எரித்தேன்
அவன் சாகவில்லை சிரித்தான் !
அமிலப் வேதிப் பொருளை
உடல் முழுதும்
படர ஊற்றினேன் - மீண்டும் சிரித்தான் !
இறுதியில் அகல பாதள குழி
தோண்டி புதைத்தேன்
அவன் மூச்சு முட்ட
ஆண்டுகள் சில உருண்டோட
அவாவில் மீண்டும் தோண்டினேன்
அவன் நிலை காண!
அவனோ எனைப் பார்த்து
ஏளனமாய் சிரித்து சொன்னான்
எனக்கு சாவில்லைடா
என் பெயர் "நெகிழி" (ப்ளாஸ்டிக்) !