இன்டர்நெட்

மனமென்னும் கட்டுபாட்டில்
கட்டி எழுப்பப்படுகின்ற
கற்பனை கோபுரங்கள் !
இன்னிசை நிகழ்வுகள் !
பண்ணிசை இராகங்கள் !
அழிவையும் வாழ்வையும்
ஆக்கும் சக்தி தரும் ஆயுதம் !
அறிவை வளர்த்திட !
தொழிலை உயர்த்திட !
உன்னதமான ஊடகம் !
இவைகளினுள் பல பில்லியன்
நடிப்பு நாடகம் ! - இனி
தூரம் தொலைவில் இல்லை
எண்ணி நினைக்கையில் - நம்
கைஎலி மார்க்குறி
கட்டுபாட்டில் வந்துவிடுகிறது
நாம் தேடும் அனைத்தும்

எழுதியவர் : சி.எம்.ஜேசு (25-May-13, 1:16 pm)
பார்வை : 263

மேலே