காதல் பிள்ளை

பிரம்மன் என்ற சிற்பி
செய்து வைத பெண் சிலையோ?
வானவில்லை கொண்டு
வண்ணம் தீட்டும் ஓவியமோ?
பாரதி சொன்ன தமிழ் மகளாய்
நாகரிகம் தெரிந்தவளோ?
எந்தன் நெஞ்சை பறிக்கொடுத்தேன்
இது கனவோ? நினைவோ?

உலகில் உள்ள அதிசயமெல்லாம்
உன்னை கண்டு மலைக்கிறது.
ஏனோ அதுவெல்லம் இன்று
உன் அழகை தினம் ரசிக்கிறதோ?
மார்கழியில் சிந்தும் பனிதுளியில்
உன் பூ முகம் தெரியும் பாரு.
இடி மினலும் புயலும் கூட
உன் அழகால் வருமே நூறு.
நீர் வீழ்ச்சியில் தோன்றும்
வானவில்லாய் எனக்கென பிறந்தாயோ?

பெண்மையென்னும் மேகம்
நெஞ்சில் மெதுவாய் பொழிகிறதே.
அந்த மேகம் சிந்தும் துளியில்
என் காதல் தெரிகிறதே.
சுவடில்லா விண்மீன்கள் - அந்த
வானம் நிறைகிறதே.
சுவடின்றி வந்தாயே.. - என்
உள்ளம் மகிழ்கிறதே!
நான் தவம் செய்து பெற்றேடுத்த
காதல் பிள்ளை நீ தானோ?

எழுதியவர் : கவிசதிஷ் (15-Apr-10, 9:14 am)
சேர்த்தது : கவி ப்ரியன்
Tanglish : kaadhal pillai
பார்வை : 972

மேலே