காதல் தற்கொலை அவசியமில்லை

ஆழா துயர்க்கண்டு
அழத்தொடங்கினான் - அவன்
காதலி கிடைக்காத ஏக்கத்தினால் !
காரணம் என்னவென்று வினவினபோது
காதல் தோல்வி என்றவன்
கயிறு முடிக்கினான்
சற்றென்று ஓர் எண்ணம் உதிக்க !
பதறிய கழுத்திலிருந்து
உதறினான் கயிற்றை !
காதல் தோல்விக்கு
தன்னை தோற்பதை விட !
காதல் ஜோடிக்காவது
வெற்றி தேடி தரலாம் - என்ற
எண்ணம் பிறந்து எழுச்சி வந்தது- தன்
விழி நீர் துடைத்து வீர்க்கொண்டேழுந்து
வாழத்தொடங்கிவிட்டான்