சாலையோர வியாபாரம்
அனுதினமும்
காலைபொழுது தொடங்குது
சாலையிலே
சூரியன் உதிக்கும்முன்னே
வாகனங்கள் முளைக்கும்முன்னே
கடைவிரித்தான்
சிதிலமடைந்த
துணி ஒன்றை வைத்து
தற்காலிக பந்தல் போட்டான் (யாரோ ஒரு சினிமா நடிகனுடைய பேனர் அது) !
சாலையிலே
நடமாட்டம் அதிகரித்தது
இளநீ இளநீ....
அண்ணே நுங்கு சாப்டறீங்களா?
என்று போவோரையும் வருவோரையும்
கூவி அழைத்தான் ...
தன் குடும்பத்திற்கு
நிழல்கொடுக்க
அவன் வெயிலிடம் மண்டியிட்டான் !
அவனை போலவே
தன் குடும்பத்தின்
நிழலுக்காக
ஒடிகொண்டிருப்பவர்களுக்கும்
ஓய்வுதியத்திற்க்காக
அரசு அலுவலகத்திற்கு
நடந்து களைத்த முதியவர்களுக்கும்
அவனது கூடாரம்
ஒரு கிராமத்து ஆலமரம் !
வருமானத்திற்க்காக
அரசு மது விற்கிறது .....
காசுக்காக கல்வியை
விற்கிறார்கள் கல்வியாளர்கள் .....
உயிர் காப்பாற்ற
மருத்துவமனை ஓடினால்
பேரம் பேசுகிறார்கள் .....
சேவை
என்று சொல்லிக்கொண்டு
தொழிலாய் பார்க்கும்
கூட்டம் ஒருபுறம் !!
தொழிலையும்
சேவையாய் பார்க்கும்
கூட்டம் மறுபுறம் !!!