வாழ்க்கை உனதாக்க ??????????????

சிறகை விரிக்கிறேன் ............
மனசிறகை விரிக்கிறேன்
வானை தாண்டியே
என்னாசை வார்த்தை வளர்க்கிறேன் ..............

பசியறியா பிள்ளையாய் வளர்ந்தேன்
போகும் திசை அறியாமல் நடந்தேன்
குறிக்கோள் வாழ்கையின் தடைகல் உணர்ந்தேன்
இலக்கு இன்றி நாளும் பறந்தேன்

நாளை பற்றி கவலை எனக்கில்லை
இன்றே நிஜம் என்பது என் கவலை
சாதிக்க நேரம் காலம் தேவை இல்லை
இறந்த நிமிடம் மறுபடி பிறப்பதில்லை

பாசத்தை பொறுத்தவரை
மனதை கேட்டு நட
பணியை பொறுத்தவரை
அறிவை கேட்டு நட

வாழ்க்கை உனதாகும்
நாளும் வளமாகும் ...............................

எழுதியவர் : ருத்ரன் (29-May-13, 4:59 pm)
பார்வை : 176

மேலே