கடம்பவனதீசனார் (காளமேகம் கவிதை )
கண்டீரோ பெண்காள் கடம்பவனத் தீசனார்
பெண்டீர் தமைச்சுமந்த பித்தனார் - எண்டிசைக்கு
மிக்கான தங்கைக்கு மேலே நெருப்பையிட்டார்
அக்காளை ஏறி னாராம்.
கண்டீரோ பெண்காள் கடம்பவனத் தீசனார்
பெண்டீர் தமைச்சுமந்த பித்தனார் - எண்டிசைக்கு
மிக்கான தங்கைக்கு மேலே நெருப்பையிட்டார்
அக்காளை ஏறி னாராம்.