என் கற்பனை காதலி
கடவுள் போல,
என் கற்பனை காதலி.
மறைந்தே வாழ்வதும்
நினைத்ததும் வருவதும்
கடவுள் போல,
என் கற்பனை காதலி.
கேட்டதெல்லாம் கொடுப்பதும்
கொடுத்ததை எல்லாம் ஏற்பதும்
கடவுள் போல,
என் கற்பனை காதலி.
பொன் நிற பதுமை
கரும் கல் நிற அழகி
கடவுள் போல,
என் கற்பனை காதலி.
குறை ஒன்றும் இல்லாதவள்
என் குறை சொல்லாத அவள்
கடவுள் போல,
என் கற்பனை காதலி.
முச்சு அடைக்க செய்துவிட்டு
என்னை தன் உள் இழுக்கும் அவள்
கடவுள் போல,
என் கற்பனை காதலி.