புரிதல்,,,,

புரிதல்,,,,

புரிதலைபுரியவைக்கமுடியாது
முயற்சித்தால் மிஞ்சுவதுபுலம்பல்

நம்மை புரிந்திடாதவொருவரை
நாம் புரிந்துவிட்டால்,,,
அவர்கள் நம்மை
புரிந்து கொள்ளவேண்டுமென்பது
முரண்பாடானது ,,,

பிடித்தலும் புரிதலும்
நாம் புரிந்து கொண்டவர்
எப்படியிருப்பினும்
தானாகத்தேடிச் செல்வது மட்டுந்தான்

நீ புரிந்திடாத
உன்னை புரிந்தவொருவன்
உன்னைத்தேடி வராதது
உன்னைப் பொருத்தவரைப் பெரிதில்லை ,,

உன்னைத் தொடராமல்
செல்லும் நாட்களிலே
இடைவெளிகள் சொல்லிடும்
உன் பிரிவினைப்பற்றி யவனிடம்

எத்தனை யெத்தனை
தள்ளிவைப்புகளிலும்
அவனாக வருவான்
உன்னை புரிந்தவன்மட்டும்

ஆம் ,,,,,,

சிறு சிறு குசுருதிகளையும்
பெருத்த அவமானங்களையுந்தாண்டி

குடுக்கல் வாங்கல் செய்திடவும்
குறுமொய்கள் வைத்திடவும்
குடைமிளகாய் மல்லி வியாபாரமில்லை
அன்பும் நட்பும்

கண்மாயில் கண்வைத்து
மழைக்கு தெரிவதில்லைப் பொழிய

கால்வாயில் போகின்ற நீரும்
கட்டிவைத்தப் பாத்தியில்
சுயநலம்பார்த்து தங்கிவிடுவதில்லை

தானாக அரும்பிடும் மொட்டின்வாசம்
தன் இனங்களுக்கு மட்டுமே
சொந்தமில்லை

இப்படி இருங்கள்

இவண்,,,,,,, "புரிந்தவன்"

எழுதியவர் : அனுசரன் (31-May-13, 4:59 pm)
பார்வை : 297

மேலே