காமம் புனிதமானது!

நாயும் பேயும் வாழும் பூமியில்
நானும் ஒரு மனிதனென்றால்
நாணமுங் கைகொட்டி நகையாதோ!
கானமும் வாய்விட்டுச் சிரிக்காதோ!

காட்டில் அலையும் விலங்கினம் போலே
நாட்டில் திரியும் ஒழுங்கீனப் பயலே
தொட்டில் தூங்கும் பச்சிளம் சிசுவை
கட்டில் பழகுவியோ காமத்தில் கூட!

நாய்கள்கூட பருவமறிந்து உறவாடுது!
பேயே உனக்கேனடா பிஞ்சிடம் வெறியானது!
மனிதனுக்குத்தான் பிறந்தாயோ!இல்லை
மடநாய்க்கு பிறந்தாயோ!தெரியவில்லை!

சுவரிலேதும் கீறல் தெரிந்தாலும் உடனே
சுண்ணத்தை அதிலே பூசி மறையுங்கள்!
பூமியிலேதும் வெடிப்பிருநதாலும் உடனே
புழுதியால் நிறப்பி மூடி ஒளியுங்கள்!

பாறை இடுக்கில் மாட்டிக் கொள்வான்!.
பாம்பு தீண்டியே துடித்தே மாள்வான்!!
சேலைகட்டினால் கல்லையுங்கட்டுவான்
வாலை நறுக்கிடும் வேளையுங்கூடிடும்!

புணர்ச்சி உணர்ச்சி வெறி கொண்டலையும்
உணர்வுகள் இல்லா உயிரினம் ஒன்று
உறவுகள் தாண்டியும் புணர்ந்திட துடிக்கும்
பிறவி,பெற்றது எல்லாம் மறக்கும்!

காமம்! அது புனிதமானது !கடவுளின் வரமது!
காதலுக்குத் தூண்டலது!கற்பின் சிரமது!
உலகம் நிலைத்திட இயற்கையின் நியதியது!
உறவுகள் தழைத்திட உதிரத்தின் பந்தமது!

விலை மகளும் தாசிகளும் காசுக்கு காமம் பழக
வீதியில் நின்று விலைபேசும் அழைப்பிருக்க!
கூசாமல் தவறியே இரத்த சொந்தம் இழுப்பதும்
பேச்சறியா சிசுக்களையும் சிதைப்பதும் ஏனடா!

காமத்திருடர்களே கட்டமிதில் திருந்துங்கள்!
காலம் விழித்துக் கொண்டது வருந்துங்கள்!
பாவந்துணிவோர்க்கு மன்னிப்பே இல்லையடா!
சாபம் இதுதாண்டா சண்டாளர்க்கு சாவுதாண்டா!

வயிறு பசித்தால் உணவையே தேடிக்கொள்
வாலிபம் பசித்தால் ஒருத்தியே சொந்தம் கொள்!
கண்டதைத்திண்ணு உண்டதைக் கக்காதே!
கொண்டதை மறந்து கண்டதில் மயங்காதே!

நீலப்படம் பார்க்காதே!நெறி தவறி அலையாதே!
வாழ்வே காமமென வெறிகொண்டு திரியாதே!
பெற்றவளும் பெண்ணென மாற்றாளை மதித்திடு!
உற்றதொழிலதனிலே உடல் வலிமை செலுத்திடு!


கவிஞர்.கொ.பெ.பிச்சையா..

எழுதியவர் : கவிஞர்.கொ.பெ.பிச்சையா.. (31-May-13, 8:31 pm)
பார்வை : 324

மேலே