சில புனிதம்
தாயின் பாதத்தில்
சுவர்க்கம் காணு
தந்தையின் வழியிலே
வாழ்க்கையை பேணு
உந்தன் மனதில்
உன்னை காணு
உறவை நீயும்
உணர்வாய் பேணு
உணர்வை மிஞ்சி
உள்ளத்தை கேளு
உயிகளில் நீயோ
மனிதம் பாரு
உயர்வாய் வாழ
உழைப்பை நோக்கு
இறைவனை நம்பி
இயல்பாய் வாழு