என் மகளுக்காக

தத்தி நடந்த சுட்டி குழந்தை
தவழ்ந்து நடப்பாள் எந்தன் மேலே
தொப்பையின்மீதே உறக்கம் கொள்வாள்
என் துகில் கலைப்பாள் அவளேதினமும் ..........

புதுபுது மொழியில் பாடல் இசைப்பால்
தாடியை இழுத்து அவளே சிரிப்பால்
பிஞ்சுகையால் தாடையில் அடிப்பாள்
என்முதுகில் ஏறி சவாரிசெய்வாள் ............

குச்சிமிட்டாய் கைநீட்டி கேட்பாள்
குழந்தை பொம்மையை அழகாய் ரசிப்பாள்
குரங்கு செப்பலில் கீச்சென்று நடப்பாள்
குட்டி சைக்கிளில் பயணம் தொடர்வாள் .......

அவளது மைதானம் எந்தன்வீடு
விளையாட்டு பொருளே எல்லா பொருளும்
உடைக்கும் பொருளை ரசித்து பார்ப்பேன்
அவள் சுட்டிதனத்தை என்றும் ரசிப்பேன் .........

அப்பா என்றால் உலகம் மறப்பேன்
அவளை உயிராய் என்றும் மதிப்பேன்
அவளுக்காகவே வாழ்வை துளைப்பேன்
அவளுக்காகவே வாழ்ந்து மடிவேன் .........

ஓடிஉழைக்கிறேன் அவளுக்காக
சேமித்து வைக்கிறேன் அவளுக்காக
கனவு காண்கிறேன் அவளுக்காக
கரைந்து போகிறேன் அவளுக்காக ........

அவளது உலகம் எந்தன் உலகம்
அவளது உறவே எந்த உறவு
அவளது மகிழ்வே எந்த மகிழ்வு
அறவே இல்லை அவள் இல்லாத வாழ்வு .........

எழுதியவர் : வினாயகமுருகன் (1-Jun-13, 4:01 pm)
பார்வை : 76

மேலே