எழுத்து .காம் - சி.எம் .ஜேசு

ஏட்டினிலே எழுதினால்
படிப்பவர் குறைவென்று
உன்னிலே சிந்தினேன் - என்
வியர்வை துளிகளை

உனைப் பார்த்து உவகைக் கொண்டு
உள் எழுத்தினிலே - பல
வகைகள் கண்டேன்

உறுப்பினர்கள் பல்லாயிரம் கொண்டு
கணம் புது வரிகளைத் தந்து
பூரிக்கவைக்கின்றாய் எம்மை

பார்வைகள் தேர்வுகள் என
பரிசுகள் வரிசைகளென
திகைக்க வைக்கின்றாய்

நினைத்தால் படிக்க கவித்தந்து
உனைதாள் பணிந்து எனைத் தந்தேன்
மனத்தால் எழுகிற எழுத்தெல்லாம்
திகைத்தால் கூட சிற்ப்பமாவோம்

எழுதியவர் : சி.எம்.ஜேசு (2-Jun-13, 3:13 pm)
பார்வை : 77

மேலே