தொடர் கவிதை....தொடர வருபவர் யார்...???
தோழமை நெஞ்சங்களே ....
வானம் எனும் தலைப்பில் கவிஜி எனும் ஒரு படைப்பு கீழே அளித்துள்ளார்...அதனை நான் தொடர மீண்டும் கவிஜி தொடர்ந்தார்...நீங்களும் தொடரலாமே...
வானம்
யார் திறந்த
ஜன்னல்
இந்த வானம்....
திறந்தே கிடக்கிறது.....
-----கவிஜி
அகன்
சன்னலைத் திற ...காற்று வரட்டும்..!!!-
கவிஜி 01-Jun-2013 1:03 pm
காற்றையே திறக்கும் ஜன்னலை தேடுகிறேன்......
அகன் 01-Jun-2013 1:33 pm
வானத்தைப் பிள..
கவிஜி 01-Jun-2013 10:23 pm
பிளந்த வானத்தில் பூத்து
நின்றது ஒரு ஜன்னல்......
அகன் 01-Jun-2013 11:31 pm
ஜன்னல் அல்ல அது.:
அது காற்றின் மறுவுரு...
உழைத்தவன் வியர்வை
விண்ணேகிச்சென்று
சில்லிட்டு உறைந்த
உழைப்பின் படிமம்...
கவிஜி
சரி
அகன் 02.06.13
அவ்வளவுதானா.....
எனக் கேட்டு அழும் சன்னலை
மூடுகிறது வானம்
புழுங்கி வருந்துகிறது காற்று..
அடுத்து தொடர்வது யார் ????????.
04-Jun-2013 7:38 pm
உங்கள் கவிதையின் தொடர்ச்சி:
மூடியது வானம்;
புழுங்கியது காற்று;
இருவரையும் சமாதானிக்க வந்தது மேகம்.
மேனி திறந்து பொழிந்தது மகிழ்மழை.
காற்றும் வானும் சிரித்தன.
அவற்றிலும் அதிகம் சிரித்தான் உழைத்தவன்!
சிநேகமாய்
புதுயுகன்