வாழ வேண்டுமே

வாழ வேண்டுமே
வாழத்தான் வழி வேண்டுமே
வளரவிட்டு
வாழ சொன்ன இறைவா - என்
வழிபாட்டில் என்ன குறைவா - உன்
வீட்டில் அணையா விளக்கு - என்
வாழ்வில் ஏனிந்த வழக்கு
தெய்வீகம் என்பது வாழ்க்கையல்லவா
தந்தது உன் வேலையல்லவா - நீ
தந்த வேலையில் காலத்தைத்
தள்ளுகிறேன் - என்றாலும்
கொல்லுகின்ற அலங்கோலத்தைக்
கண்டு அஞ்சுகிறேன்
வருவது வரட்டும் என்று வாழ்கிறேன்
தருவது தரட்டும் என்று அழுகிறேன்
அழுதாலும், தொழுதாலும் - உன்
அடியினில் மாறாமல் வென்றாடுகிறேன்
பிடியினில் அகப்பட்ட மண்ணைப்போல்
மடியினில் தாங்கி மன்றாடுகிறேன்
மலரினத்தைப் பூக்க வைத்தும் - அவை
மாலையில் வாடவைத்தும் படைத்தவன் நீ
மனித இனத்தில் பிறந்த எனக்கும்
மத இனம் மாறாமல் வாழ சொன்னவன் நீ
நெறிமுறை தவறாமல் - உன்
நீதி முறையினை நினைத்தே வாழுகிறேன்
சாதிமுறைகளை சதிராட
உன்னைத் தொழுகிறேன் - விடுகதையாய் நாளும்
நீ தொடுக்கின்றாய் - வாழ்வில்
நானும் அதை ஏற்கின்றேன் தொடர்கதையாய்
விடைகளை அறிந்தவனே - என் வாழ்வின்
தடைகளை தகர்ந்திடுவாய் - என் ஜீவனின்
ஊடல்களைக் கவர்ந்திடுவாய் - வாழவேண்டுமே
வாழத்தான் வழி வேண்டுமே - ஆண்டவனை
ஆழத்தான் நினைந்திட வேண்டுமே
பாவமும் பழியும் தொடருது - என்பின்னால்
அவைகளின் நாடகமும் நடக்குது உன்முன்னால்
இருப்பதற்குள் இயல்பான விழிகாட்டு
இறப்பதற்குள் சிறப்பதற்கு வழிகாட்டு
சிறு ஓட்டை விழுந்தாலும் கடலில்
செல்லாது ஓடம் - மனம் சிதைந்தாலும்
சொல்லாமல் இருக்காது உன் இடம்
சொல்ல நினைத்ததை சொல்லிவிட்டேன் - இனி
சொந்த பந்தமெல்லாம் நீயே என விட்டுவிட்டேன்
வாழ வேண்டுமே - வாழத்தான் வழி வேண்டுமே
வரம் வேண்டுமே - இறைவா உன்னருள் வேண்டுமே - தீக்குச்சி
விளக்கெரிய தீண்டுமே - என்
வாழ்வு சிறக்க உன் பார்வை சீண்டவேண்டுமே

எழுதியவர் : (2-Jun-13, 7:28 pm)
சேர்த்தது : s.sankusubramanian
பார்வை : 72

மேலே