உடல் வியாபாரம் !!!
அதிகாரத்துடன் அரவணைத்தான்
அவ்வளவுதான் என்று ஆரத்தழுவினான்
உடல் ஆமோதிக்க
மனம் மறுதலித்தது...
வேண்டாம் என்றேன்!
பரிகாரமாய் கரம் பற்றி
நெற்றியில் முத்தமிட்டான் - என்னை
பற்றி எடுத்து பரமபதம் ஆடினான்!!!
ஒத்துழைத்தேன் - அவன்
பேச்சுக்கு ஒத்து அவனுடன்
உழைத்தேன் !!!
கட்டி தழுவி களைத்தெழுகையில்
கண்ட இடத்திலேயே விட்டு
சென்றிருந்தான் - அன்றுமுதல்
நான் நடந்த இடமெல்லாம்
சிகப்புகள் விளக்காய் எரிந்தது!!!
அடுத்து வந்தவன்,
புது வரவு என்று முதலில் காசை எறிந்தான்,
மறுத்தேன், கோரமாய் சிரித்தான்!
அழுதேன், என் உடுக்கையை
கிழித்தெறிந்தான்...
இவனை மட்டும் மன்னித்து விட்டு விடாதீர்கள்!!!
என் இளமையை பிடித்து
நான் அழ அழ - என்
என் மானத்தை
எடுத்து எறிந்தவன் இவன்.
அடுத்தவன்,
என்னிடம் பேரம் பேசினான்
தொழிலில் அப்படி இப்படித்தான்
இருக்கும் என்றான்.
எப்படி இருக்க வேண்டுமோ,
அப்படி எல்லாம் ஆகி கொண்டேன்!
வளைய சொன்னான்,
உடல் வலிக்கவில்லை - என்
அழக் கூடாது என்று இருந்த
கண்களுக்கு வலித்தது...
அவன் கை வைத்த பொழுது,
வெட்கி கொண்டேன்.
போக போக,
வெட்கம் கெட்டு கொண்டேன்.
இப்பொழுதெல்லாம்
செயற்கை உணர்ச்சிக்கு
சொந்தக்காரி நான்...
கடைசியில் மானம் களைய
வந்து போனவர்கள் சொல்கிறார்கள்,
இவள் பெயர் வேசி என்று
இது மட்டும் எப்படி நியாயம் ஆகும்!!!
-ஜெயன் எம். ஆர்.