ஊடக விபச்சாரத்தின் உச்சகட்டம்.....................!!!

பாதிக்க பட்ட இரு அப்பாவி இளைஞர்களின் வாழ்க்கை !

கேரளா திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் அமிர்தா. இவர் கராத்தேவில் நன்கு பயிற்சிபெற்றவர். சிலதினங்களுக்கு முன்பு இவர் தனது பெற்றோருடன் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கடைக்கு சென்றார்.அப்போது அங்கு கார்பார்க்கிங் செய்வதில் அவருடைய பெற்றோருக்கும் இரு இளைஞர்களையே சிறுவாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த அமிர்தா அந்த இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளார்.இதில் ஒருவரது மூக்கு உடைபட்டு ரத்தம் கொட்டியுள்ளது.காயமடைந்த இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.இந்த பிரச்னை விவகாரமாக உருவெடுக்க அமிர்தா உடனடியாக காவல்நிலையம் சென்று தன்னை மூன்றுபேர் பாலியல் தொந்தரவுசெய்ததாகவும் அதற்க்கு எதிர்ப்புதெரிவித்தபோது அவர்கள் தன்னுடைய பெற்றோரை ஆபாசமாக திட்டியதாகவும் தற்க்காப்பிற்க்காக இருவரையும் தாக்கியதாகவும் புகார் செய்தார்.

வழக்கம்போலவே ஊடகங்களும் உண்மைநிலை அறியாமல் சகட்டுமேனிக்கு அந்த பெண்ணை ஆதரித்து அவரை இரும்புப்பெண்மணியாக சித்தரித்தும் இளைஞர்களை காமகொடூரனாகவும் சித்தரித்தும் செய்திகள் வெளியிட்டன.விளைவு இந்த இரு இளைஞர்களும் ஓட்டுனராக வேலைசெய்துவந்த அரசு பணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தை விசாரிக்ககோரி அமிர்தாவிற்கு எதிராக இளைஞர்கள் காவல்நிலையத்தில் மேல்முறையீடுசெய்ய இதனைவிசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட்டது.அந்தக்குழு அளித்த அறிக்கையில் தவறு முழுக்கமுழுக்க அமிர்தா தரப்பில் உள்ளதாகவும் அவர் தகுந்த காரணம் இல்லாமல் தன்னுடைய கராத்தேபயிற்சியை அந்த இளைஞர்கள் மீது காண்பித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனை விசாரித்த நீதிபதி அமிர்தாமீது வழக்குபதிவுசெய்ய அதிரடியாக உத்தரவிட்டார்.ஆனால் இந்த விஷயத்தையும் ஊடகங்கள் ஜோடனைசெய்து நீதிபதியை பெண்அடக்குமுறையை ஆதரிப்பவர் என்று விமர்சனம் செய்தது.விளைவு நீதிபதியும் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.ஆனால் சில ஊடகங்கள் மட்டும் உண்மைநிலையை வெளியிட்டுவருகின்றன.

ஊடகங்களின் இந்த விஷமசெயலால் பாவம் ஒருபக்கம் பழி ஒரு பக்கம் என்று செய்துவந்த அரசு வேலையும்ப்போய்,காமகொடூரன் என்ற பெயரும் வாங்கி அந்த இளைஞர்கள் அவதிபட்டுவருகின்றனர்....

எழுதியவர் : வரதன் (3-Jun-13, 2:24 am)
பார்வை : 92

மேலே