*****இப்படை தோற்கின்*****எப்படை வெல்லும்???

*****அன்பே பலமென்றும்*****
அரவணைப்பே கவசமென்றும்
பண்புள்ளோர் அனைவரும்,

*****பாசமே ஈர்ப்பென்று*****
கரங்கள் மட்டுமின்றி
இதயங்களையும் ஒருங்கிணைத்து!!!,

*****கள் வடிக்கும்*****
பூக்கள் என
புன்னகை பூத்தபடி,

*****ஒருவரின் வெற்றியில்*****
அனைவரும் ஆனந்தம்
கொள்ள,அந்த
ஒருவரும் அனைவருக்குமாய்
மனம் நெகிழ்ந்து
கண் கலங்க!!!

*****கட்டி அணைத்தப்படி*****
தரணி முழுக்க
வலம் வர
அவர்கள் காலடி
பட்ட இடமெல்லாம்
வளம் பெற,

இழிநிலை செய்து
பொடிநடை போட்டு
வரும் சிறுநரி
கூட்டம் இல்லை - இது

*****ராஜநடை போட்டு*****
பாய்ந்து வரும்
சிங்கப்படை இது!!!

ஆமாம்

*****இப்படை தோற்கின்*****
எப்படை வெல்லும்............???


தலைப்பை அளித்து எழுத வைத்த என் அன்பு
ஆருயிர் தோழர் உயர்.திரு.கார்த்திக் அவர்களுக்கு
அடியேனின் நன்றி,நன்றி,நன்றி

அன்புடன் நவீன் மென்மையானவன்

****************************************************************************
அன்பேந்தி வருகிறோம்
ஆருயிரென சொல்கிறோம்
விதைக்கபடும் விதைகள் நாங்கள்
விருச்சம் ஆவதை காணுவீர் நீங்கள்
சுதந்திரம் என்பதே நாங்களிடும் மூச்சு
சத்தியம் ஒன்றே எங்களின் பேச்சு
இலக்கிய கர்த்தாக்கள் நாங்கள் இல்லை
இன்னிசை பாடும் குயில்கள் நாங்கள்
இதயதுடிப்பு இனி ஒன்றாகும் காணீர்
இப்படைக்கு நிகர் வேறில்லை பாரீர் -அன்பென்ற
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் கூறீர் !!!!!!!!

அன்புடன் கார்த்திக் பாரதி87

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (3-Jun-13, 5:59 am)
பார்வை : 2972

மேலே