நீதி மன்றம்

நீதி மன்றமே - நீதி மன்றமே
நீ ஒரு
மீதி மன்றமே - உன் மன்றத்தில்
நிதி இருந்தால்
நீதி கூட நிறம் மாறும் - அவன் மன்றத்தில்
நீதியைத் தவிர
நிதிக் கூட தடுமாறும் - இந்த
நிலையான நீதி
குலையாதவாறு
அலையாமல் ஆண்டவன்
எழுதிவிட்டான் - அவன்
எழுதியதை உன் மன்றம்
எடுத்தாள்வதில்
எழுத்துப்பிழைகளால் - சிலரது
கழுத்துக்குக் கணக்கு முடிக்கிறது
கணக்கு முடிந்ததும்
கீழ்மன்றம்,நடுவர்மன்றம்
மேல்மன்றம் என இருந்தாலும்
நீதி என்பது ஒரே மன்றத்தில்
நிலையானது என தெரியாமல்
வாதாட வைக்கின்றாய் - சிலரை
வதைத்திடுக்கின்றாய் - அதனால்
உனக்கு இரக்கம் வருவதில்லை
உன் மன்றத்தின்
விதி இருந்தால் விளக்குகள் கூட
வீதியில் வெளிச்சத்தைத் தேடும்
அவன் சாட்சி
உன் மன்றத்தில் வருவதில்லை
உன்சாட்சி அவன் மன்றத்தில்
தேவையில்லை
நீதிதேவனாய் ஆண்டவன்
இருக்கின்றான் - உன்மன்றத்தில்
நீதி வழங்க ஒரு தேவனை
நிலைக்க வைக்கின்றாய்
நீதியின் நிழலாய்
நீதிமன்றங்கள் இருக்கவேண்டும்
நீதியை நிலைநாட்ட வகுக்கவேண்டும்
வழக்கை அறிந்தவர்கள்
வழக்கறிஞர்கள்
பொய்யானவர்கள்
மெய்யானவர்களாய் உன்மன்றத்தில்
வழக்காடுகிறார்கள் - சிலரது
வாழ்க்கையோடு போராட
வாழ்கிறார்கள் - பொய்யுரைத்து
வதைக்கிறார்கள் - அவன் மன்றத்தில்
வழக்காடியவன்
வலுவிழந்து மாண்டுவிடுகிறார்கள்
வழக்கறிஞர்களும்
வாதத்தை அறிந்தவர்களும் - அவன்
வாசலில் பேசாமல் உறங்குகிறார்கள்
பொய்யரும், மெய்யரும் அவன் மன்றத்தில்
சட்டப் புத்தகங்களை புரட்டுவதில்லை
இரவலாய் தந்த உயிரை
இறைவன் கேட்கும்போது - நீதி மன்றமே
நீதி தேவன்களே - வழக்கறிஞர்களே
இறைவன் மீது என்ன வழக்கு போடுவீர்கள்
போட்டாலும் என்ன தீர்ப்பு வழங்குவீர்கள்
நீதி கேட்டு வருவோரை வாழவிடுங்கள்
நீதி வழங்கி நீங்களும் வாழுங்கள்
நெறிமுறை நீதிமன்றத்தில் பின்பற்றுதல்போல்
நிலைத்தடுமாறி தவிப்போரை காப்பாற்றுங்கள்
நீதி மன்றங்கள் - ஆண்டவனின் ஆலயங்கள்
வரம் தாருங்கள்

எழுதியவர் : சங்கு சுப்ரமணியன் (3-Jun-13, 7:35 am)
பார்வை : 375

மேலே