சோக ராகம் தெரியாது (குமார் பாலகிருஷ்ணன்)
யுவனின் குரல்
ரஹ்மானின் இசை
மாலைநேர மழை
கருமைநிற முகில்
மொட்டைமாடி நிலவு
சன்னல்வழியே மின்னல்
இலையுதிர்கால சாலை
வசந்தகால மாலை
இடிகளின் இசைக்கு
சாரல் எழுதும் கவிதை!!
நிசப்த இரவுகளில்
ஒற்றைவிளக்குச் சாலையில்
ஒருவனாய் நடத்தல்!!
தூரல் தூண்டும்
மண்வாசத்தில்
நெடுந்தூர
நெடுஞ்சாலைப்பயணம்!!
கனவுலக மெல்லேடுகளில்
அவள் நடந்த தடம்!!
அவளை என்பரிமண
படம்பிடிக்கும்
அதிநவீன
புகைப்படக் கருவியாய்
அடையாளப்படுத்தப்படும்
என் கண்கள்!!
இருபத்தொன்றாம்
நூற்றாண்டிலும்
தூதுசொல்வதற்காய்
நான்வளர்க்கும்
மாடப்புறா..!!
நான் ரசித்த
வெண்ணிற பனித்துளிபடிந்த
சிவப்புநிற ரோஜா!!
என்னை ரசித்த
என்வாசல் முற்றக்கண்ணாடி!!
என் ரகசியங்கள் பகிரும்
நம்பிக்கை மிக்க
தோழனான மூன்றுவயது
மூன்றாவது வீட்டுக் குழந்தை!!
=================================
இவைகள்தான் வருந்த வேண்டும்
எனக்கு பிடித்தவளுக்கு
என்னை பிடிக்காததற்க்கு
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
