மரங்கள் இறைவன் கரங்கள்
ஆபத்தில் உதவுபவன்
அன்பு கரம் நீட்டுபவன்
ஆதரவு நிழல் தருபவன்
அனைவரின் பசியையும் ஆற்றுபவன்
இறைவன் என்றால் ?
பூமியெங்கும் பசுமைபோர்த்தி
புவிஈரம் காத்துவந்து
மக்களையெல்லாம் காத்துவந்த
மரங்களை நாம் என்ன சொல்ல ..........
வெய்யிலில் இருந்து நமைகாத்து
பூமியெங்கும் குடைவிரித்து
வானம் அதை குளிர்வித்து
மழை பொய்த்து மரத்தால் அல்லவோ ...........
காய் கொடுத்து கனிகொடுத்து
களைப்பாற இடம்கொடுத்து
பசியாற்றிய மரம்அதை
மறந்துவிடும் மனிதர்களை என்ன சொல்ல .........
காற்றுமண்டலம் சுத்தபடுத்தி
மாசுபடலாம் முழுதும் நீக்கி
நம் மூச்சுபடலம் படரவிடும்
நல்வேளை மரத்தின் வேலை .............
வீட்டின் மேல் கூரைமுதல்
உள்ளிருக்கும் வாரைவரை
உதவிவாழும் மரம் அது
உற்ற நண்பன் என்பதை மறக்கலாமா .........
சாலையோரம் நடைபயில
பூங்காவில் ஓய்வெடுக்க
நிழல்தரும் மரம் அழிந்தால்
சுகம் அது எங்கே கிடைக்கும் ..........
மக்கள்தொகை வளர்ந்துவர
மரத்தின் தொகை குறைந்துவர
மழை அளவும் குறைந்துபோனது
தண்ணீர் பஞ்சம் அதிகமானது ..............
கடவுளுக்கு இருக்கின்ற
கருணைஅது மரத்திற்கு உண்டு
ஆதரவுகரம் நீட்டும் அவனைப்போல்
ஆயிரம் கிளைகள் மரத்திற்கும் உண்டு ..........
நேசக்கரம் நீட்டும் மரத்திற்கு
பாசாகரம் நாமும் நீட்டுவோம்
பொங்குகின்ற வெப்பம் தடுத்து
நாம் தங்குகின்ற இப்புவியை காப்போம் ..........
மனம் வைத்தால் மரம் வைக்கலாம்
மரம் வைத்தால் வனம்சேர்க்கலாம்
வனம் சேர்த்தால் மழை பெருக்கலாம்
மழை பெருகினால் வளம் அடையலாம் ..........