ஒரு வரி கவிதை

ஒரு வரி கவிதை
ஒரு வரி கவிதைகோர்
உண்மையான போட்டி
சிறு வாகன விளம்பரம்
சுற்றிசுற்றி வந்து
ஊரை அசதிக்கொண்டி
ருந்தது
வசப்பட்ட மக்கள்
வாசலுக்கு வந்து
பார்க்க
வாலிபங்கள்
ஜாலி மூடில் தயார்
ஆனது !
சில பெரிசுகள்
'ஏதோ வரி
கேட்கிறாங்க ' என
வாசல்
மூடிப்போனது ...
திருக்குறளே ஒன்னே
முக்காலடி
இதென்ன ஒரு வரி ?
சிருகுறளோ?
என்றது ஒரு குரல் :
கிராமத்து தமிழ்
வாத்தி.--
சிறந்த
கவிதையை தேர்வு
செய்து
பரிசளிப்பும்
உண்டாம்-
கூட்டத்து வரிசையில்
நின்று
நானும்
ஒருவரி கவிதையை
எழுதி போட்டேன் :
ஆம் ..அது அவள் பெயர்..!
போட்டிமுடியும்
முன் -நான்
புறப்பட்டுவிட்டேன் ;
அடுத்த நாள்
சொன்னார்கள்
இரவு வெகு நேரம்
வெற்றிபெற்றதாக -
என் பெயர்
வாசிக்கபட்டதாம் -
பரிசு கொடுக்க ;
பொதுவாக
சிரித்துவிட்டு
மெதுவாக நகர்ந்தேன்
-
ஆம் --
"பரிசுக்குரிய
கவிதையை
பரிசளித்துவிட்ட
பாவி நானென்ற "
ஒரு வரி கவிதையை
உரக்க
சொல்லமுடியவில்ல
ை!
***********

எழுதியவர் : ஷாஜன் (6-Jun-13, 8:31 pm)
சேர்த்தது : Shajan gss
Tanglish : oru vari kavithai
பார்வை : 87

மேலே