காதல் திருமணம்
கரையேறும் எண்ணம்
கண் விழிகளுக்கு இருந்தால்
கண் இமைகளுக்கு வேலையே இல்லை ....
- திருமணம் (கண் இமை-பெற்றோர்)
விழி
வழி தடுமாறாமல்
இரு வேறு
விழிகளுடன் பேசிக்கொள்கிறது - காதல்
இரு வேறு விழிகளின்
இமைகளும் ஒன்றாக
இணைந்து துணையாக வந்தால் - காதல் திருமணம்...