என் கல்லூரி இறுதி ஆண்டில்...

வான் முழுக்க வானவில்லாய்,
வாழ்ந்து வந்த காலம் அது
வாழ்வை தேடி வண்ணங்கள் எல்லாம்
பிரிகின்ற தருணம் இது
கண்கள் கண்ணீர் காணவில்லை,
காற்றை போல வாழ்ந்ததினால்
கண்கள் கண்ணீர் விரும்பியதே,
காலம் நம்மை பிரித்ததினால்

என் ஆசை மறைத்து, உன் ஆசை வளர்த்து
உள்ளத்தில் நட்பை விதைத்துவிட்டேன்
நீ காட்டும் அன்பை, நீர் போல நினைத்து
நட்பையும் மரம்போல் வளர்த்துவிட்டேன்
வளர்ந்து போன மரமும் இன்று,
வாடி போகுது ஏனோ
வாடிப்போகும் நட்பினை வளர்க்க,
கண்கள் அழுதிடும் தானோ..
பிரிவை கொஞ்சம் தூங்கச்சொல்லு
கண்களில் கண்ணீர் சாகச்சொல்லு

நீ தந்த உணவை, என் இதழ் சுவைக்க
உள்ளத்தில் இன்பத்தை கண்டுவந்தோம்
நீ கொண்ட சோகம், என் நெஞ்சம் அறிய
கண்களின் பாஷையில் பேசிவந்தோம்
வலிகள் கூட தோற்றுபோகும்,
எங்கள் வகுப்பை கண்டால்
வானம் கூட சிறியதாகும்,
எங்கள் நெஞ்சம் கண்டால்
இளமை முதுமை ஆனபின்னும்
கல்லூரி நட்பு குழந்தைதான்

எழுதியவர் : பிரபுராஜ்.மு (8-Jun-13, 8:43 pm)
சேர்த்தது : பிரபுராஜ்
பார்வை : 381

மேலே