இடையூறு செய்யாதீர்..
கடந்த சில நாட்களாக எழுத்து குழுமத்திற்கும் எனக்கும் ஒரு குறிப்பிட சில நபர்களிடமிருந்து மினஞ்சளும், அழைப்புகளும் வந்தன. மேலும் மேதாவித்தனமாக மறைமுகமாக தாக்கும் வேலையையும் செய்வதாக உணர்கிறேன்.
இவர்களுக்கான பதிலை இங்கேயும் தருகிறேன்.
- ஒரு தனிப்பட்ட நபரை பற்றி, அவருக்கு எழுத்து குழுமத்தில் இருந்து சென்ற எச்சரிக்கை மற்றும் உரையாடல்களை யாரிடமும் பகிர்தல் செய்ய முடியாது.
- ஒரு சிலர் விருப்பத்திற்காக ஒரு படைப்பை நீக்க முடியாது.
- அப்படி நீக்கப்படாத படைப்பு உங்கள் கொள்கைக்கு எதிரானது என்றால் சட்டத்தை அணுகலாம்.
- எங்கள் குழுமத்தில் எடுக்கப்படும் எந்த முடிவிற்கும் தனிநபர் யாருக்கும் விளக்கம் அளிக்கும் கட்டாயம் இல்லை. இதுவரை விளக்கங்கள் செய்ய முர்ப்பட்டதே நல்ல நோக்கத்துடன் தான்.
- மிரள வைக்கிறேன் மிருக கூட்டம் என்ற வேடிக்கை எல்லாம் மிருகக்காட்சிகே பொருத்தமானது. கூட்டம் வைத்து கொள்கை பரப்பும் கூட்டம் ஒன்று, இப்போது இயக்குபவர்களையும் இயக்க ஆசை படுகிறது போலும். நயம் கெட்ட வார்த்தைகளில் வள்ளல்கள் என பட்டம் பெறுவதில் என்ன மகிழ்ச்சியோ.
- ஒரு முடிவு உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக தரம் குறைவான வேலையில் இறங்காதீர். அப்படிப்பட்டவர் செயலால் எழுத்து தளத்திற்கோ, அதை இயக்கம் எங்களுக்கோ விரயங்கள் தான் அதிகம். அப்படிப்பட்டவர் அதையே செய்ய விரும்பினால் எழுத்து உங்களுக்கான இடமல்ல.
ராஜேஷ்