அறியாச்சிறை

கையில் அள்ளிய ஆற்றில்
துள்ளும் மீன்குஞ்சு -
அறியுமா...?

( தன் சாம்ராஜ்யம்
கையகப்படுத்தப் பட்டதை ..!)

சீட்டெடுத்து
ஜோசியம் சொல்லும்
கிளிக்குத் தெரியுமா -
தன் வானம் கூண்டுக்குள்
சுருங்கிப் போனது ..?

எழுதியவர் : நிலாநேசி (10-Jun-13, 10:45 am)
சேர்த்தது : நிலாநேசி
பார்வை : 64

மேலே