வாழ்க்கை
வாழ்க்கை
வாழக்கற்றவனுக்கு!
வாழ்வற்றவனுக்கு
ஒரு பொழுதுபோக்கு
அவனின் வாழ்க்கை
அடுத்தவனின்
வாழ்க்கையும் கூட!
அந்த பொழுதுபோக்கில் ஒன்றுதான்
அவனின் சாதியமும், மதவெறியும்! அது
நன்கு வாழும் முடிகளிநூடே
உருவாகும் வழுக்கை!
வழுக்கை
வாழ்க்கையின்
முதிர்ச்சியில்ல
வாழ இயலா முடியின்
வீழ்ச்சி!
வாழக்கற்றவனுக்கு
வாழ்ந்தவனின்
வரலாறு
தேவையில்லை!
வாழத்தெரியா,
வாழ்வற்ற பிச்சைக்காரனுக்குத்தான்
வழுக்கையெனும்
சாதியமும், மதவெறியும்
தேவை, அதற்கு
வரலாற்றை
பிச்சையெடுக்கிறான்
வாழ்வில்
உயிரற்ற, உணர்வற்ற முடியாய்
வீழ்வதற்கு!