தெருப்பாடகன் – மனப்போக்கு பகுதி 2

சுதந்திரம் எல்லார்க்கும்
சூசகங்கள் உல்லாசம்

கொட்டிய அருவியில்
குளிக்குது மனசு

குளிர்ந்த காத்துல
நனைவதே தினுசு.

மந்திர உச்சரிப்பு உதட்டில்
காதில் ஒரு நச்சரிப்பு காற்றில்

சிறு சிறு தேவைகள் சுற்றிலும்
எதிலும் எரிச்சல்…. பற்றிலும்…..

தேவைகள் கடக்கும் காலத்தால்,
கடந்தன சிந்தனைகள் பாவத்தால்,
அழுது விரிகின்றன சோகத்தால்.

கண்கள் காண மட்டுமா?
கண்ணீர் வடிக்கவும்தானே….!

உணர்ச்சிகள் எங்கு பிறக்கின்றன
புலன்களிலா அன்றி சிந்தனையிலா
அதையும் தாண்டி
நிகழ்வுடன் சேர்ந்த
உள்வாங்கலிலேயேவா?

தொடர்கிறது ஆராய்ச்சி !
விடைதேடி புறப்பட்ட பயணத்தில்
நேர்காணல் கொண்டது அநேகம் பேரை!
பதில் கிடைக்கவே இல்லை
இன்னும்.

சில துளிகள் தூரத்தில்தான்
கிடக்கிறது எனது பதில்

என் மனம் மட்டும்தான்
எட்ட மறுக்கிறது
அதன் தொடுதலை
எம்பி பிடிக்க.

சுதந்திரம் எல்லார்க்கும்
சூசகங்கள் உல்லாசம்

எழுதியவர் : மங்காத்தா (10-Jun-13, 6:28 pm)
பார்வை : 121

மேலே